செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு -

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று(20) முன் தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


#Chemmani #செம்மணி #செம்மணிமனிதபுதைகுழி #JaffnaNews, #Chemmani, #செம்மணி, #செம்மணிமனிதபுதைகுழி,

Post a Comment

Previous Post Next Post

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info